கலாம் உலக சாதனை புத்தகத்தில் 14 சாதனைகள் நிகழ்த்திய சிறுவனுக்கு பாராட்டு விழா

கலாம் உலக சாதனை புத்தகத்தில் 14 சாதனைகள் நிகழ்த்திய சிறுவனுக்கு பாராட்டு விழா
X

கலாம் உலக சாதனை புத்தகத்தில் 14 சாதனைகள் நிகழ்த்திய சிறுவன் சாணக்யா

கலாம் உலக சாதனை புத்தகத்தில் 14 சாதனைகள் நிகழ்த்தி உலக சாதனை படைத்த 4 வயது சிறுவனுக்கு குடியாத்தம் அரிமா சங்கத்தில் பாராட்டு விழா

குடியாத்தம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த வினோத் மற்றும் தனலட்சுமி தம்பதியின் 4 வயது மகனான சாணக்கியா தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். இதனிடையே இவர் சென்னையில் நடந்த கலாம் உலக சாதனை புத்தகத்தில் 14 சாதனைகள் நிகழ்த்தி உலக சாதனை பதக்கம் பெற்றுள்ளார்

இவர் மாநில தலைநகரங்கள், 36 மாவட்டங்களின் பெயரை உச்சரித்தும், இந்திய வரைபடத்தில் மிகப்பெரிய இடங்களை கண்டறிந்தல், தமிழ் நூல்கள் அதன் ஆசிரியர்கள் பெயர்கள் உச்சரித்தல், மேலும் கண்களைக் கட்டிக்கொண்டு, தமிழ் தாய் வாழ்த்து தேசிய கீதம் பக்தி பாடல்களை பியானோவில் வாசித்தல் போன்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இதற்காக அந்த சிறுவனுக்கு குடியாத்தம் அரிமா சங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்பொழுது அந்த சிறுவன் தான் செய்த சாதனைகள் அனைத்தையும் பார்வையாளர் முன்னிலையில் செய்து காட்டி அசத்தினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!