சூறைக்காற்றுடன் மழையால் மரங்கள் சாய்ந்தன, வீடுகள் சேதம்
கனமழை காரணமாக சேதமடைந்த வீடுகள்
குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் மழை பெய்தது சில இடங்களில் சுமாரான மழையும் சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது.
குடியாத்தம் அடுத்த மோர்தானா, ஜங்காலப்பல்லி, ராகிமானல்லி, போடியப்பனூர் ஆகிய கிராமங்களில் நேற்று மதியம் மழை பெய்தது.
போடியப்பனூர் ராகிமானபல்லி ஆகிய கிராமப் பகுதிகள் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சூறைக்காற்று வீசியதால் ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்தன, பல ஆண்டுகள் வயது முதிர்ந்த ஏராளமான மரங்களும் சாய்ந்தன, ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன.
ஓடுகள் காற்றில் பறந்தன, ஏராளமான மாட்டு கொட்டைகளும், குடிசைகளும் கூரைகள் காற்றில் பறந்தன சுமார் அரைமணி நேரம் சூறைக்காற்று ராகிமானப்பள்ளி மற்றும் போடியப்பனூர் பகுதியில் ருத்ர தாண்டவம் ஆடியது.
சேதம் ஏற்பட்ட பகுதிகளில் மோர்தானா ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சூறைக்காற்று வீசியதாலும் மழை பெய்தாலும் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மோர்தானா ஊராட்சிக்குட்பட்ட மோர்தானா, ஜங்காலப்பல்லி, ராகிமானல்லி, போடியப்பனூர் ஆகிய கிராமங்களில் பல மின்கம்பங்கள் சாய்ந்தன.
பல இடங்களில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்தும் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால் சீர் செய்ய சில நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. இதனால் 4 கிராமங்களும் இருளில் மூழ்கியது.
மேலும் இப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் தொடர்புக்காக செல்போன் டவர்கள் இல்லாததாலும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், மின்சாரம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு பேரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu