குடியாத்தத்தில் 500 கிலோ லட்டால் செய்யப்பட்ட சக்தி கணபதி

குடியாத்தத்தில் 500 கிலோ லட்டால் செய்யப்பட்ட சக்தி கணபதி
X

லட்டு மற்றும் உலர்பழங்களால் உருவாக்கப்பட்ட சக்தி கணபதி 

வினாயகர் சதூர்த்தியை முன்னிட்டு 500 கிலோ லட்டு மற்றும் உலர்பழங்களால் செய்யபட்ட சக்திகணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

கொரோனா வைரஸ் அச்சத்தால் தமிழக அரசு வினாயகர் சதுர்த்தியான இன்று கோயில் மற்றும் முக்கிய வீதிகளில் வினாயகர் சிலை வைக்க அனுமதி ரத்து செய்துள்ளது. குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையில் உள்ள வலம்பூரி சக்திகணபதி ஆலயத்தில் மூலவருக்கு அபிஷேகமும் தீபஆராதனையும் செய்யபட்டது.

மேலும் 20ம் ஆண்டு லட்டு வினாயகர் பெருவிழா முன்னிட்டு 500 கிலோ லட்டு மற்றும் உலர்பழங்கள் கொண்டு சக்திகணபதி உருவம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது. இந்த லட்டு வினாயகரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்