பேரணாம்பட்டு அருகே மணல் கடத்திய மூவர் கைது; டிராக்டர்கள் பறிமுதல்

பேரணாம்பட்டு அருகே மணல் கடத்திய மூவர் கைது; டிராக்டர்கள் பறிமுதல்
X

பேரணாம்பட்டில் மணல் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்கள்

பேரணாம்பட்டு அருகே பத்தலபள்ளி பகுதியில் மணல் கடத்திய மூவரை போலீசார் கைது செய்து, டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக வந்த தொடர்புகாரை அடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ரோந்தின்போது பேரணாம்பட்டு அருகே பத்தலபள்ளி பகுதியில் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த காத்தவராயன் (38)மற்றும் முத்துவேல் (29) ஆகிய இருவரை கைது செய்து 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் பக்காலப்பல்லி பகுதியில் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டு இருந்த ரமேஷ் (48) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து டிராக்டர் பறிமுதல் செய்தனர்

மூவரையும் கைது செய்த போலீசார் 3 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!