ஜெய் பீம் பட விவகாரம்: குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் புகார்

ஜெய் பீம் பட விவகாரம்: குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் புகார்
X
ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராக குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் நடிகர் சூர்யா, ஜோதிகா மீது பாமகவினர் புகார் அளித்துள்ளனர்

குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில், மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் பாமகவினர் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில்,

சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த படத்தை தயாரித்த நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, படத்தின் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது சாதி பிரிவினை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அப்போது மாநில இளைஞரணி துணை செயலாளர் குமார், மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்

Tags

Next Story
future of ai act