குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் திருவிழாவில் கடைகள் வைக்க அனுமதி
கோப்புப்படம்
கவுண்டன்ய ஆற்றில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக ஒரு மாதத்துக்கு மேலாக ஆற்றில் பெரு வெள்ளம் ஓடியது.
இதனால் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி குடியிருந்த குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து, அங்கு குடியிருந்தவர்களை முகாம்களில் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில் ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
இந்தநிலையில் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்று பகுதியில் சிறிய வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய வந்தால் மீண்டும் தொடர் மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாலும், .ரங்கராட்டினம் போன்றவற்றை ஆற்றுப்பகுதியில் அமைத்தால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாலும், கடைகள் அமைக்க தடை விதித்து கலெக்டர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
ஆற்றுபகுதியில் கடை வைக்க அனுமதிக்க வலியுறுத்தி விழாக்குழுவினர் மற்றும் வியாபாரிகள் கதிர் ஆனந்த் எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தததை அடுத்து இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு மற்றும் கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைதொடர்ந்து திருவிழாவின்போது கவுண்டன்ய ஆற்றுப் பகுதியில் கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu