குடியாத்தம் பகுதியில் தென்னை மரங்களை தாக்கி வரும் புதுவிதமான கருப்பு நோய்

குடியாத்தம் பகுதியில் தென்னை மரங்களை தாக்கி வரும் புதுவிதமான கருப்பு நோய்
X

தென்னையை தாக்கும் புதுவித கருப்பு நோய்

குடியாத்தம் பகுதியில் தென்னை மரங்களை தாக்கி வரும் புதுவிதமான கருப்பு நோய் காரணமாக தென்னை விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது குறிப்பாக அம்மணங்குப்பம், பசுமாத்தூர், ஹைதர் புரம், உள்ளிட்டப் பகுதிகளில் பல நூறு ஏக்கரில் தென்னை மரங்கள் விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்

தற்போது குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரங்களை புதுவிதமான மர்ம நோய் தாக்கி வருகிறது. முதலில் தென்னை ஓலைகளில் சிறு சிறு வெள்ளை புழுக்களாக உருவாகி பின்பு தென்னை ஓலை முழுவதும் கருப்பாக மாறுகிறது. இதனால் தென்னை ஒலைகள் காய்ந்து பின்பு தென்னை மரமும் காய்ந்து போகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

மேலும்தேங்காய் விளைச்சலும் மகசூலும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதையே நம்பி உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல ஆண்டுகள் தாங்கள் வளர்க்கப்பட்டு வந்த தென்னை மரங்கள் தற்போது காய்ந்து உதிர்ந்து வருவது தங்களுக்கு வேதனையாக உள்ளதாகவும்,விவசாயத்தை காக்கவும் தென்னை மரங்களைக் காக்கவும் வேளாண் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த புதுவிதமான கருப்பு நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags

Next Story
ai healthcare products