குடியாத்தம் பகுதி அடிப்படை வசதிக்காக நிதி ஒதுக்கீடு: நகர் மன்றத்தில் தீர்மானம்

குடியாத்தம் நகர் மன்ற கூட்டம்
குடியாத்தம் நகர மன்ற கூட்டத்தில் முதல் கூட்டம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. நகரமன்றத் துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில்தாமஸ், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் முக்கியமான அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய் கட்டுதல், கல்வெட்டு அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசுகையில்,
குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும், நகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நாய்கள், பன்றிகள் போன்றவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் கால்வாய் மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளதால் கூடுதலாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். நிலுவையிலுள்ள வரி பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம் பகுதியின் முக்கிய பிரச்சினையான ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என உறுப்பினர்கள் பேசினார்கள்.
மேலும் அத்தியாவசிய பணிகள் குறித்து நகர் மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. வரவேற்றும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu