பேரணாம்பட்டு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விபத்தில் தொழிலாளி பலி

பேரணாம்பட்டு அருகே  மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விபத்தில் தொழிலாளி பலி
X

பேரணாம்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான சக்திவேல்

பேரணாம்பட்டு அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி

பேரணாம்பட்டு அடுத்த மேல் கொத்தக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி என்பவர் மகன் சக்திவேல். வெல்டிங் வேலை செய்யும் தொழிலாளி. இவர் நேற்று காலை தனது வீட்டிலிருந்து சங்கராபுரத்திலுள்ள தங்கள் விவசாய நிலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மேல்பட்டி - கடாம்பூர் சாலையில் சென்றபோது எதிரே கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சக்திவேல் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன.

இதில் சக்திவேல் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். பிரபு தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த சக்திவேல் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மேல்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
ai and future of education