குடியாத்தம்அருகே கொரோனா தடுப்பூசி முகாம்

குடியாத்தம்அருகே கொரோனா தடுப்பூசி முகாம்
X
குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ. அமலு விஜயன் தொடங்கி வைத்தார்

குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கல்லூர் ரவி, கே. எஸ்.குபேந்திரன், வக்கீல் டி.ஜி. பிரபாகரன், பி.மோகன், துளசிராமுடு பக்தவச்சலம், கோவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் கொரோனோ தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் சுற்றுப்புற கிராம மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள திரண்டுவந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சேம்பள்ளி ஊராட்சி பொதுமக்கள் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture