புறப்பட்ட சில நிமிடத்தில் பேருந்தில் புகை; அலறியடித்து ஓடிய பயணிகள்
தீப்பொறியுடன் புகைமூட்டம் ஏற்பட்ட அரசுப் பேருந்து.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து சில அடி தூரத்தில் தீ பொறியுடன் புகைமூட்டம் சூழ்ந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறியபடி கீழே இறங்கி ஓட்டம்பிடித்தனர்.
குடியாத்தம் முதல் ஆம்பூர் வரை செல்லும் வழிதடம் G5 நகர பேருந்து ஆம்பூர் செல்ல பயணிகளுடன் புறப்பட்டது. சில அடி தூரத்தில் சென்றபோது, ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் தீப்பொறியுடன் புகை மூட்டம் அதிகமானது. இதனால் அச்சத்தில் பயணிகள் இறங்கி ஓடினர்.
இதனையடுத்து, பேருந்து சாலையிலேயே நின்றதால் போக்குவரத்து நெரிச்சலும் ஏற்ப்பட்டது. பேருந்து இயங்காத நிலையில் நடத்துனர், அரசு பனிமனை பணியாளர்கள், பொது மக்கள் என அனைவரும் பேருந்தை கையாள் தள்ளி பேருந்து நிலையம் உள்ளே நிறுத்த முயன்றனர்.
அதற்க்குள் போக்குவரத்து நெரிச்சல் அதிகமானதால் மிகவும் சிரமப்பட்டு ஒருவழியாக பேருந்தை பேருந்து நிலையத்தில் ஓரம்கட்டினர்.
இந்த காட்சியை கண்ட பொதுமக்கள், மற்றும் வாகன ஓட்டிகள் டீசல் விலை உயர்ந்தன் காரணமாக அரசு பேருந்தை தள்ளியபடியே பயணம் என கிண்டல் செய்தபடி சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu