தருமபுரியில் ஆயிரம் ஏக்கரில் மெகா கைத்தறி பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் காந்தி

தருமபுரியில் ஆயிரம் ஏக்கரில்  மெகா கைத்தறி பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் காந்தி
X

அன்னை அஞ்சுகம் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி மற்றும் பயிற்சி வழங்கும் திட்டத்தினைஅமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

தருமபுரியில் ஆயிரம் ஏக்கரில் 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மெகா கைத்தறி பூங்காஅமைக்கப்படும் என அமைச்சர் காந்தி கூறியுள்ளார்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் செயல்பட்டுவரும் அன்னை அஞ்சுகம் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 20 நபர்களுக்கு கைத்தறி மற்றும் பயிற்சி வழங்கும் திட்டத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். பின்னர் கணபதி தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்திலும் ஆய்வு மேற்கொண்டார். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் மற்றும் முதன்மை செயலாளரான பீலா ராஜேஷ் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்,

பின்பு செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் காந்தி, இந்தியாவிலேயே எல்லா துறைகளை விட நெசவாளர்களுக்கு கூலி மிகவும் குறைவாக தரப்படுகிறது. எனவே அவர்களின் வாழவை முன்னேற லூங்கியிலிருந்து அதிக லாபம் தரும் சேலைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு புது மாடல்களில் சேலைகளை உற்பத்தி செய்து நெசவாளர்களுக்கு 365 நாட்களும் வேலை வாய்ப்பு கிடைக்க வழி செய்யப்பட்டு வருகிறது. வேலூர் அருகே உள்ள அரியூர் நூற்பாலையை 53 ஏக்கரில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகத்தில் பிரம்மாண்ட கைத்தறி பூங்காவை தருமபுரியில் 1000 ஏக்கர் பரப்பளவில் 10,ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பல்வேறு பகுதிகளில் கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்