ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை அகற்ற வலியுறுத்தல்

ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை அகற்ற வலியுறுத்தல்
X

தட்டாங்குட்டை கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

குடியாத்தம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை அசம்பாவிதம் ஏற்படும் முன்அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்முட்டுக்கூர் ஊராட்சி தட்டாங்குட்டை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளி அருகே 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்ததால் இதனை அகற்ற கோரி அப்பகுதி கிராம மக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்ததாக கூறுகின்றனர். மேலும் பலமாக காற்று அடிக்கும் போது இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசைவதாகவும் கூறப்படுகிறது.

இதன் அருகே அங்கன்வாடி மையம் இருப்பதால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அந்த மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்புவது இல்லை. இது பயன்பாடற்ற நிலையில் உள்ளது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக அதிகாரிகள் அகற்ற வேண்டும் எப்போது வேண்டுமானாலும் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கீழே சரியும் அபாயம் இருப்பதாக அப்பகுதி பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.

எனவே ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி