11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கராத்தே மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது

11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கராத்தே மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது
X

போக்சோவில் கைது செய்யப்பட்ட கராத்தே மாஸ்டர் ஹயாஸ் அகமது

பேரணாம்பட்டு அருகே 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கராத்தே மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது

குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பேரணாம்பட்டு அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். வயிற்று வலி காரணமாக பேரணாம்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்தபோது மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த மருத்துவர் சிறுமியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பின்னர் சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி பகுதியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஹயாஸ் அகமது (வயது 30) இவர் பேரணாம்பட்டு பகுதியில் அரசு பள்ளியில் சுமார் 30 மாணவர்களை வைத்து கராத்தே பயிற்சி அளித்து வருவதும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதும் தெரியவந்தது.

கராத்தே மாஸ்டர் ஹயாஸ் அகமதுவை கைது செய்த போலீசார் போக்சோ சட்டம் மற்றும் கற்பழிப்பு என இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!