குடியாத்தம் அருகே ஆற்றின் குறுக்கே இரும்புப்பாலம் அமைப்பு

குடியாத்தம் அருகே ஆற்றின் குறுக்கே இரும்புப்பாலம் அமைப்பு
X

பாலம் திறக்கப்பட்டதும் மகிழ்ச்சியுடன் சென்றுவரும் மக்கள்

மோர்தானா அணை அருகே கவுண்டன்யமகாநதி ஆற்றின் குறுக்கே இரும்புப்பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது

மோர்தானா அணை அருகே கவுண்டன்யமகாநதி ஆற்றின் மறுகரையில் போடியப்பனூர், ராகிமானபல்லி கிராமங்கள் உள்ளன. ஆற்றில் மழைவெள்ளம் ஓடுவதால் 2 கிராம மக்கள் மோர்தானா கிராமத்துக்கு வர சிரமப்பட்டனர். ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்கக்கோரி கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில் போடியப்பனூர், ராகிமானபல்லி கிராமங்களில் இருந்து மோர்தானா கிராமத்துக்கு வந்து செல்ல கவுண்டன்யமகாநதி ஆற்றின் குறுக்கே 118 மீட்டர் நீளத்துக்கும், ஒரு மீட்டர் அகலத்துக்கும் தற்காலிக இரும்புப்பாலம் அமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.

நிகழ்ச்சியில் குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யுவராஜ், சாந்தி, திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நத்தம் பிரதீஷ், ஒன்றிய குழு உறுப்பினர் கோதண்டம், மோர்தானா ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டதால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!