சூதாட்டம் நடப்பதை எஸ்பியிடம் தெரிவிக்காத இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் நாட்றம்பள்ளியை சேர்ந்த தொழிலதிபர் ஞானசேகரன். இவர் நேற்றிரவு காரில் குடியாத்தம் பகுதியில் இருந்து காரில் நண்பர்களுடன் வீட்டிற்கு சென்றார். வாணியம்பாடி வளையாம்பட்டு மேம்பாலத்தில் சென்றபோது போலீஸ் உடையில் வந்த 4 பேர், ஞானசேகரன் அவரது நண்பர்களை தாக்கி அவரிடம் இருந்த ரூபாய் 25 லட்சத்தை பறித்துச்சென்றனர். இதுகுறித்து வாணியம்பாடி போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியில் சூதாட்டம் நடப்பதாகவும், சூதாட்டில் பங்கேற்று ஆடிய ஞானசேகரன் அவரது நண்பர்கள் ஆட்டத்தில் வெற்றி பெற்று அதில் கிடைத்த ரூபாய் 25 லட்சத்தை கொண்டு சென்றபோது தான் மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது .
இந்த சம்பவத்தின் மூலம் பேரணாம்பட்டில் சூதாட்டம் நடக்கும் தகவல் குறித்து வேலூர் மாவட்ட காவல் துறைக்கு தெரிய வந்தது. இதையடுத்து பேரணாம்பட்டு பகுதியில் நடந்த குற்றசம்பவங்கள் குறித்து எஸ்பியின் கவனத்திற்கு கொண்டு செல்லாத பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் தனிப்பிரிவு காவலர் செல்வராஜ் ஆகியோரை இன்று ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி செல்வகுமார் உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu