வேலூர் அருகே கள்ளச்சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வேலூர் அருகே கள்ளச்சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
X
வேலூர் அருகே கள்ளச்சாராய வியாபாரிக்கு குண்டாஸ்!. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, அக்ரஹாரம் அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசனின் மகன் ராஜீவ் காந்தி (39) என்பவர் அப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி அதனை அப்பகுதியில் விற்பனை செய்து வருவதாக குடியாத்தம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர் விசாரணையில் ராஜீவ் காந்தி அப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் உற்பத்தி செய்து வருவது தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அவர்களுக்கு காவல்துறை சார்பில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

பரிந்துரையின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜீவ் காந்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!