குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா பூ பல்லக்கு
குடியாத்தம் கெங்கையம்மன் புஷ்ப பல்லக்கு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியும், கடந்த 11-ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், 14-ம் தேதி தேர்த்திருவிழாவும், 15-ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடந்தது. இந்த விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இவ்விழாவின் தொடர்ச்சியாக பூப்பல்லக்கு பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் அருகே கோபாலபுரம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சிவலிங்கம் மற்றும் விநாயகர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய உலா வந்தது.
பல்லக்கில் அமைக்கப்பட்டிருந்த விதவிதமான அலங்காரங்களில் அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், கௌரவ தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணிக்குழு சேர்ந்த ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் மற்றும் இளைஞர் அணியினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் குடியாத்தம் தரணம்பேட்டை புஷ்ப வியாபாரிகள் சங்கம் சார்பில் 67-ம் ஆண்டு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது குடியாத்தம் கண்ணகி தெரு காளியம்மன் கோவில் அருகே அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.
இந்தப் பல்லக்கில் சிறப்பம்சமாக முதலில் சிறிய பல்லக்கு செய்யப்பட்ட அதில் 14அடி உயரத்தில் சமயபுரத்து அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது தொடர்ந்து புற்று அம்மன் அலங்காரத்தில் பூப்பல்லக்கு உலா வந்தது.
இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் புஷ்ப வியாபாரிகள் சங்க தலைவர் ராமலிங்கம், துணைத் தலைவர் நாராயணசாமி பொருளாளர் பாலையா, செயலாளர் சந்திரசேகர், கவுரவ தலைவர் லோகநாதன் உள்பட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
குடியாத்தம் அகமுடைய முதலியார் சங்கம் சார்பில் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் இரண்டு யானைகள் பிளிரும் வகையில் அஷ்டலட்சுமிகள் சுவாமி உருவங்கள் வைக்கப்பட்டிருந்தது நகரின் முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய உலா வந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu