குடியாத்தம் கஸ்பா கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா
கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் கஸ்பா கவுதமபேட்டை கெங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 31-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாலாபிஷேகமும் நடைபெற்றது தொடர்ந்து நேற்று இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று காலை தேர்த்திருவிழா நடைபெற்றது.விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரில் வைக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.
முன்னதாக தேரோட்டத்தை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஊர் நாட்டாமை டாக்டர் ஏ.கென்னடி, துணை நாட்டாமை ஏ.வி.செல்வம், நகரமன்ற உறுப்பினர் எம்.கற்பகம்மூர்த்தி, ஊர் கவுரவத் தலைவர் ஆர்.மூர்த்தி, ஊர் தலைவர் பி.மேகநாதன், ஊர் செயலாளர் எம்.வீராங்கன், ஊர் பொருளாளர் பி.மோகன், நகர்மன்ற உறுப்பினர் எம்.மனோஜ், டாக்டர் நாகராஜ், திமுக பிரமுகர்கள் ஜம்புலிங்கம், நாகேந்திரன், பொன்ராஜேந்திரன், கிருஷ்ணவேணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேவல்களை பலியீட்டும் உப்பு மிளகுகளை தூவி நேர்த்தி கடனை செலுத்தினார்கள் திருவிழா முன்னிட்டு நாளை காலை அம்மன் சிரசு திருவிழா நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu