குடியாத்தம் , திருப்பத்தூர் மருத்துவமனைகள் மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்வு
குடியாத்தம் அரசு மருத்துவமனை
குடியாத்தம் , திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்வு
குடியாத்தம் , திருப்பத் தூர் மருத்துவமனைகள் மாவட்ட தலைமையிட மருத்துவ மனைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன . . தமிழகத்தில் ராணிப்பேட்டை , திருப்பத்தூர் , அரியலூர் , தென்காசி என புதிதாக உருவான மாவட்டங்களில் மாவட்ட தலைமையிட மருத்துவமனைகள் உருவாக்கப்படாமல் இருந்தது . ஏற்கெனவே உள்ள மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட தலைமையிட மருத்துவமனைகள் , அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்ட ன. இம்மாவட்டங்களுக்கும் மாவட்ட தலைமையிட மருத்துவமனைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது . இதில் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ஏற்கெனவே வேலூர் மாவட்ட தலைமையிட மருத்துவமனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்ந்தவுடன், வாலாஜா அரசு மருத்துவமனை மாவட்ட தலைமையிட மருத்துவமனையாக உருவாக்கப்பட்டது . இம்மருத்துவமனை அப்படியே ராணிப்பேட்டை மாவட்ட தலைமையிட மருத்துவமனையாக நீடிக்கிறது .
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்துக்கு புதிய மாவட்ட தலைமையிட மருத்துவமனையாக குடியாத்தம் அரசு மருத்துவமனையை நிலை உயர்த்த அரசுக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டது . அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமையிட மருத்துவமனையாகநிலை உயர்த்தவும் கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டது. அதற்கேற்ப குடியாத்தம் , திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகள் மாவட்ட தலைமையிட மருத்துவமனைகளாக தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu