பாஸானது தெரியாமல் மீண்டும் 10-ம் வகுப்பு படித்த அரசு பள்ளி மாணவன்
பாஸானது தெரியாமல் மீண்டும் 10-ம் வகுப்பு படித்த அரசு பள்ளி மாணவன்
வேலூர் மாவட்டம் வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், படித்து வரும் கணேசனுக்கு. தற்போது பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வந்துள்ளது. அப்போது கணேசனின் பெற்றோரை அழைத்த பள்ளி நிர்வாகம், தங்கள் மகன் கடந்த ஆண்டே தேர்ச்சி பெற்றுவிட்டதாகவும், இதனால் இந்த ஆண்டு தேர்வு எழுத வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளது.
இதனால் மாணவர் கணேசன் மற்றும் அவரது பெற்றோர் குழம்பியுள்ளனர். அப்போதுதான் கடந்தாண்டே மாணவர் கணேசன் 10ம் வகுப்பு பாஸ் ஆனது தெரியவந்தது. கொரோனா தொற்று காரணமாக அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மாணவர் கணேசனை வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம், மீண்டும் 10ம் வகுப்பிலேயே சேர்த்து படிக்க வைத்திருக்கிறது.
மாணவரும், தான் பாஸ் ஆனது கூட தெரியாமல் கல்வி பயின்று வந்துள்ளாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதால் கல்வித்துறை உயரதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu