கெங்கையம்மன் கோவில் திருவிழா: ஆற்றுப்பகுதியில் கடைகள் அமைக்க தடை

கெங்கையம்மன் கோவில் திருவிழா: ஆற்றுப்பகுதியில் கடைகள் அமைக்க தடை
X

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா (கோப்புப்படம்)

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்றுப்பகுதியில் கடைகள் அமைக்க தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்றுப்பகுதியில் கடைகள் அமைக்க தடை விதித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கவுண்டன்ய ஆற்றில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக, ஒரு மாதத்துக்கு மேலாக ஆற்றில் பெரு வெள்ளம் ஓடியதில் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி குடியிருந்த குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. எனவே அங்கு குடியிருந்தவர்களை முகாம்களில் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த 1,282 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

இந்தநிலையில் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்று பகுதியில் சிறிய வியாபாரிகள் பொம்மை கடைகள், விளையாட்டுப்பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பொழுது போக்கிற்கான ரங்கராட்டினம் மற்றும் இதர கடைகள் அமைத்து வியாபாரம் செய்தால் மீண்டும் தொடர் மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், மண்வளம் குறித்த நிலைமை அறியாத நிலையில் ரங்கராட்டினம் போன்றவற்றை ஆற்றுப்பகுதியில் அமைத்தால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கோர்ட்டு உத்தரவில் நீர்வழிப் புறம்போக்குகளில் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ஆக்கிரமிப்புகள் ஏதும் இருக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஆக்கிரமிப்புகள் செய்பவர்கள் மீது சட்டப்படி நீதிமன்ற அவமதிப்பு ஏற்படுத்தப்படும்.

எனவே கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்று புறம்போக்கில் எவ்வித கடைகள் அமைப்பது முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil