பேரணாம்பட்டு அருகே மான் வேட்டையாடிய இருவர் கைது

பேரணாம்பட்டு அருகே மான் வேட்டையாடிய இருவர்   கைது
X

மான் வேட்டையாடியவர்களை கைது செய்த வனத்துறையினர்

பேரணாம்பட்டு அருகே துலக்கன்குட்டை வன பகுதியில் மான் வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்

குடியாத்தம், பேரணாம்பட்டு அடுத்த துலக்கன்குட்டை வன பகுதியில் சிலர் மான் வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட பேரணாம்பட்டு வனத்துறையினர், மானை வேட்டையாடி அதை கறியாக்கி சமைத்துக் கொண்டிருந்த துலக்கன்குட்டை பகுதியை சேர்ந்த பரசுராமன்( 54) மற்றும் பாஸ்கர் (34) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து மான் தலை மற்றும் மான்கறி, வேட்டைக்குப் பயன்படுத்திய கத்தி, வலை உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் பேரணாம்பட்டு வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story