குடியாத்தத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் உபகரணம் வினியோகம்

குடியாத்தத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் உபகரணம் வினியோகம்
X

குடியாத்தத்தில் விவசாயிகளுக்கு தென்னங்கன்று மற்றும் வேளாண் உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் உபகரணங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

குடியாத்தம் வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்மை உபகரணங்கள் மற்றும் தென்னங்கன்றுகள், பண்ணை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேளாண்மை அலுவலர் ஆர்.அன்பழகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கலந்துகொண்டு ஒரு விவசாயிக்கு மானிய விலையில் ரோட்டாவேட்டர் கருவியும், விவசாயிகளுக்கு மானிய விலையில் 2500 தென்னங்கன்றுகளையும், தார்ப்பாய்கள், விவசாய பண்ணை கருவிகள் வழங்கினார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி