பேரணாம்பட்டில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

பேரணாம்பட்டில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
X

பேரணாம்பட்டில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

பேரணாம்பட்டில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து பைக், சிலிண்டருக்கு பாடை கட்டி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பெட்ரோல் , டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது . மேலும் எதிர்க்கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது .

அதன்படி வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பேரணாம்பட்டு பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் பெண்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற் பட்டோர் பங்கேற்று , பாஜ மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பைக் சிலிண்ட ருக்கு மாலை அணிவித்து பாடை கட்டி இறுதிச்சடங்கு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!