தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் மீண்டும் கொரோனா பரிசோதனை

தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் மீண்டும் கொரோனா பரிசோதனை
X
குடியாத்தம் அருகே தமிழக- ஆந்திர எல்லைப்பகுதியில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

ண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி தமிழக அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழக எல்லைப்புற பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது

அதன் பேரில் குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் மேற்பார்வையில் மருத்துவர் தயாளன், சுகாதார ஆய்வாளர் கபாலீஸ்வரன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் மற்றும் பணியாளர்கள் ஆந்திரா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சைனகுண்டா சோதனைச்சாவடி தாண்டி குடியாத்தம் வரும் வாகனங்களை நிறுத்தி அதில் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

மேலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!