12ம் வகுப்பு மாணவியை கடத்திய கல்லூரி மாணவன் கைது

12ம் வகுப்பு மாணவியை கடத்திய கல்லூரி மாணவன்  கைது
X
குடியாத்தம் அருகே 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவியை கடத்திய கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தில் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது 12 ம் வகுப்பு படித்து முடித்த பள்ளி மாணவியை கடந்த 23 ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது தந்தை மேல்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மேல்பட்டி போலீசார் மேல்பட்டி அருகே கொத்தமாரிகுப்பம் பகுதியில் மாணவியை மீட்டனர். மேலும் அவருடன் இருந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவன் பெயர் கௌதம்( 21)என்பதும் அவன் குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருவதும் தெரிய வந்தது.

மேலும் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கௌதமை கைது செய்த மேல்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!