வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்.

வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்.
X
கே.வி.குப்பம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு .சண்முகசுந்தரம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

கே.வி.குப்பம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சண்முகசுந்தரம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் குடியாத்தத்தில் உள்ள ராஜாகோபால் பாலிடெக்னிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது இரு தொகுதி வாக்கு எண்ணும் மையங்களுக்கும் தனித்தனியாக முகவர்கள் செல்வதற்கான வழிகளை ஏற்படுத்தவும், வாக்கு எண்ணும் நாளன்று வாக்கு எண்ணும் பணி பாதுகாப்பான முறையில் நடைபெறுவதற்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்வதற்கு பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது காவல் துணை கண்காணிப்பாளர் திரு ஸ்ரீதர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திருமதி.வத்சலா திருமதி .ராஜேஸ்வரி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்.கீர்த்தனா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!