குடியாத்தம் கூட்டுறவு நகர வங்கியில் நகை கடன் தள்ளுபடி சான்று

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கூட்டுறவு நகர வங்கியில் தமிழக அரசு அறிவித்த பொது நகை கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் 5 சவரன் நகைகளுக்கு கீழ் அடகு வைத்த 4 ஆயிரத்து 462 பேருக்கு ரூ.13 கோடியே 10 லட்சத்து 59ஆயிரத்து 458க்கான நகை கடன் அசல் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து நகை கடனுக்கான அசல் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் கூட்டுறவு நகர வங்கியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வங்கியின் மேலாண்மை இயக்குனரும் வேலூர் சரக துணை பதிவாளர் கோ.அருட்பெருஞ்ஜோதி தலைமை தாங்கினார்.
வங்கியின் துணைத் தலைவர் எஸ்.என்.சுந்தரேசன், உறுப்பினர்கள் எஸ். சம்பத்குமார், எஸ்.ஐ.அன்வர்பாஷா, ஜி.ஜெயக்குமார், கவிதாபாபு, ஆர்.சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வங்கியின் பொது மேலாளர் கே.அருள் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் நகை கடன் அசல் மற்றும் வட்டி தள்ளுபடி காண சான்றிதழ்களை வங்கி தலைவர் எம்.பாஸ்கர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வங்கியின் இயக்குனர்கள், வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu