மணக்காேலத்தில் ரத்த தானம்: மருத்துவ தம்பதிகள் விழிப்புணர்வு

மணக்காேலத்தில் ரத்த தானம்: மருத்துவ தம்பதிகள் விழிப்புணர்வு
X

குடியாத்தத்தில் திருமணம் முடிந்தவுடன் மாலையுடன் ரத்த தானம் செய்ய வந்த புதுமண தம்பதி.

திருமணம் முடிந்தவுடன் மாலையுடன் ரத்த தானம் செய்ய வந்த புதுமண தம்பதி.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், குடியாத்தம் செதுக்கரை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ரேகா, என்பவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் தீபக்அவினாஷ் என்பவருக்கும் இன்று காலை சென்னையில் உள்ள குன்றத்தூர் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்தவுடன் நேராக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு திருமண மாலையுடன் மணக்கோலத்தில் வந்த மருத்துவ தம்பதிகள் ரேகா மற்றும் தீபக்அவினாஷ் ரத்ததானம் செய்தனர்.

இது குறித்து மணப்பெண் மருத்துவர் ரேகா கூறுகையில், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வுக்காகவே நாங்கள் மணக்கோலத்தில் ரத்த தானம் செய்வதாகவும் திருமணம் முடிந்து விட்டால் பெண்கள் ரத்ததானம் செய்யக்கூடாது என்ற மூட நம்பிக்கை உள்ளது அதை போக்குவதற்காகவே தாங்கள் ரத்த தானம் செய்ததாகவும் இனி ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளுக்கு ரத்த தானம் செய்வோம் எனவும் செய்தியாளர்களிடம் மணப்பெண் டாக்டர் ரேகா தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture