குடியாத்தம் அருகே 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

குடியாத்தம் அருகே 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு
X

குடியாத்தம் அருகே 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

குடியாத்தம் அருகே மலைப்பகுதிக்கு சாராய ரெய்டு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார்

கொரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பதாக வந்த தொடர் புகாரையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு உள்ளிட்ட காவல் துறையினர் இரு சக்கர வாகனத்தில் சென்று குடியாத்தம் அருகே ரங்கசமுத்திரம், பூங்குளம், பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் அதிரடி சாராய வேட்டை நடத்தினர்.

அப்போது சாராயம் காய்ச்ச பயன்படும் மூலப் பொருட்களையும் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களையும் கைப்பற்றி காவல்துறையினர் அழித்தனர். மேலும் தப்பியோடிய கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!