பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் 362 கிலோ கஞ்சா பறிமுதல்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் 362 கிலோ கஞ்சா பறிமுதல்
X

 லாரியில் கடத்தி வரப்பட்ட 362 கிலோ கஞ்சா பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பறிமுதல்

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் 40 லட்சம் மதிப்பிலான 362 கிலோ கஞ்சா பறிமுதல். சென்னை போதை தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கசாவடியில் ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வேர்கடலை ஏற்றி செல்லும் வாகனத்தில் 181 பாக்கெட்டில் மறைத்து வைத்து 362 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டது.

போதை தடுப்பு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் படி மண்டல இயக்குனர் அமித் காவெட் தலைமையில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சுமார் 2 நாட்களாக கண்காணித்து வந்தனர்.

கடைசியில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காத்திருந்த போலீசார் லாரி வந்தவுடன் விரைந்து வந்து பிடித்தனர். ஒருவர் இதில் வேர்கடலை லோடு இருப்பதாகவும் மற்றொருவர் நான் வேலூரில் இருந்து லிப்ட் கேட்டு வந்ததாகவும் நாடகமாடினர்.

அதனை கண்டுகொள்ளாத காவல்துறையினர் இருவரையும் பிடித்து வாகனத்தில் அமரவைத்தனர். மேலும் வேர்கடலை ஏற்றி வந்த லாரியில் ஏறி பார்த்த போது கஞ்சா இருந்ததை கண்டு பிடித்தனர்.

மேலும் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், குற்றவாளிகளை பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் தேனிமாவட்டம் சேர்ந்த பாண்டி 46, கொண்ட நாயக்கனூர் பகுதியை சேர்ந்த முருகன் 39 என தெரியவந்தது. இதனையடுத்து இருவரிடமும் தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Next Story
ai powered agriculture