மூன்றாவது மாடியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு

மூன்றாவது மாடியில் விளையாடி கொண்டிருந்த  சிறுவன் தவறி விழுந்து  உயிரிழப்பு
X
குடியாத்தம் அருகே நண்பர்களுடன் மூன்றாவது மாடியில் விளையாடி கொண்டு இருந்த 11 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பிச்சனூர் பேட்டை கட்டபொம்மன் தெருவை சேர்ந்த ஓட்டுனர் சங்கரன் என்பவரின் மகன் தீபேஷ் (11 ) இவர் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார்

இதனிடையே இன்று வீட்டின் மூன்றாவது தளமான மொட்டைமாடியில் சிறுவர்களுடன் தீபேஷ் விளையாடிக்கொண்டிருந்தான் அப்பொழுது மூன்றாவது மாடியில் இருந்து நிலை தடுமாறி தவறிக் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

உடனடியாக சிறுவனை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தீபேஷ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறிக் கீழே விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்