பதுக்கி வைக்கப்பட்ட 5 டன் ரேசன்அரிசி பறிமுதல்

பதுக்கி வைக்கப்பட்ட 5 டன் ரேசன்அரிசி பறிமுதல்
X

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு எல்.ஆர்.நகர் பகுதியில் உள்ள கவுஸ் என்பவருக்கு சொந்தமான காம்ப்ளக்சில் சட்டவிரோதமாக ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களுக்கு கடத்த ரேசன் அரிசி பதுக்கப்பட்டிருப்பதாக பேர்ணாம்பட்டு வட்டாட்சியருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காம்ப்ளக்சில் சோதனை செய்ததில் ரேசன் அரிசி பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களையும் பறக்கும்படை தனி வட்டாட்சியர் பறிமுதல் செய்தார். மேலும் பிடிபட்ட அரிசி குடியாத்தம் அரசு சேமிப்பு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!