குடியாத்தம் அருகே கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே கார் மோதி 2 பேர் உயிரிழப்பு
X
குடியாத்தம் அருகே கார் மோதிய விபத்தில், 100 நாள் வேலைத் திட்டத்திற்கு சென்று வந்த பெண் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

குடியாத்தம் அருகே கார் மோதிய விபத்தில் 100 நாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு. விபத்து ஏற்படுத்தி சென்ற காரை துரத்தி மடக்கி பிடித்த பொதுமக்கள்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இப்பணியில் ஈடுபட்டிருந்த சேங்குன்றம் கிராமத்தை சேர்ந்த பூசணம்மாள்(60), வசந்தம்மாள்(55) இருவரும் மதியம் பணி முடித்து வீடு திரும்பி்யுள்ளனர். அப்போது குடியாத்தத்திலிருந்து பலமனேர் சாலையில் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் நோக்கி சென்ற கார் சாலையில் சென்ற பூசணம்மாள்(60), வசந்தம்மாள்(55) இருவர் மீது மோதியதில் இருவரும் பலத்த படுகாயமடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு வேகமாக சென்ற காரை அங்கிருந்த இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் விரட்டிச் சென்று, சைனகுண்டா சோதனைச் சாவடி அருகே மடக்கி பிடித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த குடியாத்தம் காவல் துறையினர் கே.ஜி.எப்பைச் சேர்ந்த மகேஷை (26) கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலூகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 100 நாள் வேலைக்கு சென்ற ஒரே பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!