கட்டுமான தொழிலாளி கீழே விழுந்து உயிரிழப்பு

கட்டுமான தொழிலாளி கீழே விழுந்து உயிரிழப்பு
X
கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த போது, சாரம் சரிந்து உயர் அழுத்த மின்சார கம்பி மீது விழுந்தது. தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் பகுதியில் மகேந்திரன் என்பவர் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டி வருகிறார். இதில் இரண்டாவது மாடியில் கம்பி கட்டும் வேலையில் தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது கம்பி கட்டுவதற்காக கட்டி வைத்திருந்த சாரம் கயிறு அறுந்து சரிந்துள்ளது.

அப்பொழுது சாரத்தின் மீது நின்று கம்பி கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த வேப்பூர் பகுதியை சேர்ந்த குணசேகரன்( 44) என்பவர் சாரம் சரிந்ததில் அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பி மீது விழுந்து மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story