அரசு பேருந்துகள் மீது கல் ஏறிந்து தாக்குதல்: 3 பேர் கைது

அரசு பேருந்துகள் மீது கல் ஏறிந்து தாக்குதல்: 3 பேர் கைது
X
அரசு பேருந்துகள் மீது கல் ஏறிந்து தாக்கி கண்ணாடியை உடைத்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மூன்று பேர் கைது.

வேலூரில் 3 அரசு பேருந்து மீது கல் ஏறிந்த 3 போக்குவரத்து ஊழியர்கள் கைது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு பகுதியில் நேற்று இரவு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான மூன்று அரசு பேருந்துகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல் ஏறிந்து தாக்கினர்.

சேலம் செல்லும் இரண்டு பேருந்துகள் மற்றும் பேர்ணாம்பட் செல்லும் ஒரு பேருந்து உட்பட 3 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேர்ணாம்பட் அரசு பேருந்து ஓட்டுனர் தியாகராஜன் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் படி காவல் துறையினர் பேருந்து மீது கல் எறிந்தவர்களை தேடி வந்த நிலையில் கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் லுங்கியுடன் 3 பேர் கையில் கல்லோடு நின்றுள்ளனர். அவர்களை அழைத்து விசாரித்ததில் இம்மூவரும் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றுபவர்கள் என்றும் இவர்கள் தான் அரசு பேருந்து மீது கல் எறிந்து தாக்கியதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அணைகட்டு தாலுக்கா கீழ்கொத்தூரை சேர்ந்த ஓட்டுனர் சரவணன்(42), ஊணை வாணியம்பாடியை சேர்ந்த ஓட்டுனர் செந்தில்குமார்(37), நாராயணபுரத்தை சேர்ந்த நடத்துனர் தனஞ்செழியன்(50) ஆகிய மூன்று பேரை கைது செய்து வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story