வேலூரில் 10 சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை
வேலூர் தனியார் மருத்துவமனையில் 10 சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள நறுவி மருத்துவமனையில் அதன் தலைவர் ஜி.வி.சம்பத் மற்றும் அடையாறு ஆனந்தபவன் நிர்வாக இயக்குநர் சீனிவாச ராஜா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்தனர்.
அப்போது, நறுவி மருத்துவமனையும் அடையாறு ஆனந்தபவனும் இணைந்து வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்ட பகுதிகளை சேர்ந்த இருதய நோய் உள்ள 5 வயது முதல் 15 வயது வரையில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் 10 பேரை தேர்வு செய்து இலவச அறுவை சிகிச்சையை இந்த ஆண்டு செய்ய இருக்கிறோம்.
இதற்கு ரூ.40 லட்சம் செலவாகும் மேலும் ஆண்டுதோறும் இதே போல் சில நிறுவனங்களின் உதவியோடு இந்த இலவச அறுவை சிகிச்சையை ஆண்டு தோறும் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
மேலும் இந்த 10 சிறுவர்களின் சிகிச்சைக்கான செலவை அடையாறு ஆனந்தபவன் முழுவதுமாக ஏற்றுகொள்கிறது. இந்த மருத்துவமனையில் இதுவரையில் 6 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்துள்ளோம்.
வேலூர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பல மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
பேட்டியின் போது மருத்துவமனை செயல் தலைவர் பால் ஹென்றி, டாக்டர் அரவிந்தன் நாயர் உள்ளிட்ட மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu