வேலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி மரணம்

வேலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி செங்குட்டுவன்
வேலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி செங்குட்டுவன் (வயது 65). காட்பாடி திருநகரில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் காலமானார். அவருடைய உடல் திருநகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு வேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை 59,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 30 ஆண்டுகளுக்கு பின்னர் வேலூரில் அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற 2-வது வேட்பாளர் இவர்.
2001-ல் இருந்து 2006 வரை வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞராகவும், 2011 முதல் 2014 வரை பொது வழக்கறிஞராகவும் பதவி வகித்தார். 1980-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் தனது மாணவர் நாட்களில் அ.தி.மு.க. உறுப்பினராக இருந்தார்.
அ.தி.மு.க இரண்டாக உடைந்தபோது அ.ம.மு.க.வில் சேர்ந்தார். பின்னர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu