வேலூர் மாவட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வேலூர் மாவட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
X
வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, 2 நகராட்சிகள் 4 பேரூராட்சிகள் என 180 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது .

இதற்காக 1147 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 49 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 277 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.

வேலூர் மாநகராட்சியில் 2 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் . மீதமுள்ள 178 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 819 போட்டியிடுகின்றனர் என மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.


Tags

Next Story