வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்

வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்
X

பைல் படம்

வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தின் கீழ் 5.17 லட்சம் பேருக்கு மாத்திரை விநியோகிக்க இலக்கு

வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தின் கீழ் 1 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர ) 13ம்தேதி முதல் வரும் 18ம்தேதி வரை குடற்புழு நீக்கும் மாத்திரை ( அல்பெண்டசோல் ) வழங்கப்படுகிறது.

இதேபோல் 2 வது கட்டமாக வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரையும், விடுபட்டவர்களுக்கு 27ம் தேதியும் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. இதற்கான முகாம்கள் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் , ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவைகள் மூலமாக சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

1 வயதிலிருந்து 2 வயதுக் குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது உடையவர்களுக்கு 1 மாத்திரையும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 1 மாத்திரையும் வழங்கப்படுகிறது. இந்த மாத்திரையானது காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை வழங்கப்படும். இதனை காலை சிற்றுண்டிக்கு பிறகு அல்லது மதிய உணவிற்கு பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு சுற்றுகளில் வேலூர் மாவட்டத்தில் 1 வயதிலிருந்து 19 வயதுக் குட்பட்ட 4,03,906 குழந் தைகளுக்கும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 1,13,495 பெண்களுக்கும் மொத்தம் 5,17,401 நபர்களுக்கு குடற் புழு நீக்க மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil