வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களில் தீவன பயிர்கள் வளரப்பு

வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களில் தீவன பயிர்கள் வளரப்பு
X

கால்நடை தீவன பயிர்கள்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 52.5 ஏக்கரில் கால்நடைகளுக்கு தேவையான தீவன பயிர்கள் வளர்க்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை பொறுத்தவரை கால்நடை தீவன உற்பத்தி கடந்த காலங்களை விட 50 சதவீதம் குறைந்து விட்டது . இதனால் கால்நடைகளுக்கு பெருமளவில் பாதிப்பு உண்டாக வாய்ப்பு உள்ளது . இதை தவிர்க்கவே இம்மாவட்டத்தில் கால்நடை தீவன அபிவிருத்தி திட்டம் கடந்த ஆண்டுகளில் தீவிரமாக செயல் படுத்தப்பட்டது . அதன்படி , 2020-2021ம் ஆண்டிலும் இந்த தீவன உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை கால் நடை பராமரிப்புதுறை மேற்கொண்டுள்ளது .

கால்நடை தீவன உற்பத்திகளை பொறுத்தவரை வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 17.5 ஏக்கர் என மொத்தம் 52.5 ஏக்கர் நிலங்கள் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களாக கண்டறியப்பட்டுள்ளது . இந்த நிலங்களில் தீவன சோளம், தீவன கம்பு, தீவன மக்கா சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுபுல், கினியாபுல், கொழுக்கட்டைபுல், குதிரைமசால், வேலி மசால், தீவன தட்டைபயறு, முயல்மசால், சவுண்டல் போன்ற கால் நடை தீவனபயிர்களை கால்நடை பராமரிப்புத் துறை, ஊரக வளர்ச்சி துறையுடன் இணைந்து பயிரிட உள்ளது .

இப்பகுதிகளில் விளையும் தீவனங்களை விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு பெற்று செல்லலாம் . இதன் மூலம் கால்நடை தீவன உற்பத் தியை அதிகரிக்கலாம் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!