வேலூர் மாவட்டத்துக்கு கோவேக்சின் தடுப்பூசிகள் வந்தன

வேலூர் மாவட்டத்துக்கு கோவேக்சின் தடுப்பூசிகள் வந்தன
X
வேலூர் மாவட்டத்துக்கு 10 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் நேற்று வந்து சேர்ந்தது

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் பலர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். கோவிஷீல்டு தடுப்பூசி தேவையான அளவு உள்ளதால் அவை அனைத்து முகாம்களிலும் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசி நேற்று 10 ஆயிரம் மருத்துகள் வந்தன. அவை பொதுமக்களுக்கு முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் போடப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!