காட்பாடி விஐடி கொரோனா பாதுகாப்பு மையம் : கலெக்டர் ஆய்வு

காட்பாடி விஐடி  கொரோனா பாதுகாப்பு மையம் : கலெக்டர் ஆய்வு
X

காட்பாடி விஐடி பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் பரவலாக கொரானா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்நிலையில் பொது மக்கள் முக கவசம் அணிய வேண்டும்,பேருந்துகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது.

மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் , அவர்களை மருத்துவமனைகளிலும் மற்றும் பல்வேறு கல்லூரிகள் மற்றும் திருமண மண்டபங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் விஐடி பல்கலைக்கழகத்தில் தயார் நிலையிலுள்ள கொரோனா பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் குமரவேல் பாண்டியன்., பார்வையிட்டு ஆய்வு செய்தார் . உடன் மாநகர நல அலுவலர் மரு.மணிவண்ணன் உள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture