சாலையோரம் கழிவுகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

சாலையோரம் கழிவுகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
X

வேலூரில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் 

வேலூரில் இன்று நடந்த டெங்கு காய்ச்சல் தடுப்பு கூட்டத்தில் சாலையோரம் கழிவுகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை

டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துவது குறித்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார் . டிஆர்ஓ பார்த்தீபன் முன்னிலை வகித்தார்.

இதில் கலெக்டர் பேசுகையில், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் நகரில் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காத அளவுக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு புழுக்கள் உற்பத்தியாகாதவாறு மருந்து தெளிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அதே போல் வீடுகள் தோறும் ஆய்வு செய்து தேவையற்ற டயர் , உடைந்த பானைகள் போன்ற பொருட்களை வைத்திருக்கக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை அகற்றவேண்டும்.

சாலை யோரம் இறைச்சி மற்றும் தொழில் நிறுவன கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது . இதனை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் . அதன்பின்னர் உரிய ஆதாரங்களுடன் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேசினார் .

இந்த கூட்டத்தில் உதவி கலெக்டர் ஐஸ் வர்யா, ஆர் டி ஓக்கள் விஷ்ணுபிரியா, ஷேக் மன்சூர், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil