/* */

வேலூர் கோட்டையில் ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை

73 வது குடியரசு தினத்தையொட்டி வேலூர் கோட்டையில் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஏற்றிவைத்தார்.

HIGHLIGHTS

வேலூர் கோட்டையில் ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை
X

73 வது குடியரசு தினத்தையொட்டி வேலூர் கோட்டையில் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஏற்றி வைத்தார்.

73 வது குடியரசு தினத்தையொட்டி வேலூர் கோட்டையில் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஏற்றி வைத்தார்.

பின்னர், வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர் சமூக நல்லிணக்க வலியுறுத்தும் வகையில் சமாதானப் புறாவை பறக்கவிட்ட ஆட்சியர் திறந்த ஜீப்பில் சென்று காவலர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

சிறப்பாக பணியாற்றிய 48 காவலர்களுக்கு முதலமைச்சரின் நற்பணி பதக்கங்களும், பின்னர் கொரானா வைரஸ் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சமூக நலத்துறை, நீர்வள ஆதாரத்துறை துறை, வருவாய் துறை சுகாதாரத் துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட உள்ளிட்ட 28 பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கொரானா பரவலைத் தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக வெளியை பின்பற்றியும் பெற்று பங்கேற்றனர்.

Updated On: 26 Jan 2022 12:40 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  4. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  5. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  6. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  8. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  9. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  10. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?