வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் விழா குறித்து கலெக்டர் அறிவிப்பு
எருது விடும் விழா காட்சி படம்
வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் எருதுவிடும் விழா நடைபெற அனுமதிக்கப்பட்ட கிராமங்களில் காலை 11.00 மணிமுதல் பிற்பகல் 02.00 மணி வரை மட்டுமே விழா நடத்த வேண்டும் எனவும் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க தவறும்பட்சத்தில் எருதுவிடும் விழாக்கள் தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் விழாவிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை விழாகுழுவினர் சரியான முறையில் கடைபிடிக்காமல் அலட்சியத்துடன் விழா நடத்தியதின் விளைவாக பேர்ணாம்பட்டு வட்டம் கள்ளிச்சேரி கிராமம் மற்றும் வேலூர் வட்டம் கீழரசம்பட்டு கிராமம் ஆகியவற்றில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கோவிட் பெருந்தொற்றுகாலங்களில் அரசின் வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்காமல் அலட்சிய நோக்கில் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடுகின்றனர்.
எனவே மாவட்டத்தில் எருதுவிடும் விழா நடத்த அனுமதிக்கப்பட்ட கிராமங்களில் அரசு விதிகளை சரியான முறையில் கடை பிடிக்க வேண்டும் எனவும் மற்ற கிராமம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் காளைகளை அனுமதிக்கப்படுவதாலும் அளவுக்கதிகமான பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க தவறும்பட்சத்தில் எருதுவிடும் விழாக்கள் தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu