விசா இல்லாமல் முறைகேடாக தங்கியுள்ள வங்கதேசத்தினர் விவரங்கள் சேகரிப்பு

வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை மாவட் டங்களில் விசா இல்லாமல் முறைகேடாக வங்கதேசத்தினர் தங்கியுள்ளார்களா ? என்று மத்திய புலனாய்வு பிரிவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர் . கடலூர் மாவட்டம் பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சியில் சந்தேகத்திற் கிடமான நபர்கள் தங்கியிருப்பதாக புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து , மத்திய புலனாய்வுப் பிரிவு போலீசார் கடந்த 2 ம்தேதி ஆய்வு செய்தனர் . அப்போது, அந்த வீட்டில் 3 ஆண்கள் , 2 பெண்கள் , 3 வயது குழந்தை இருப்பது தெரியவந்தது . இதுதொடர்பான விசாரணையில், பல போலியான ஆவணங்களும், வெளிநாட்டினருடன் தொடர்ந்து பேசியிருப்பதும் தெரிய வந்தது . மேலும் அவர்கள் வங்க தேசத்தினர் என்பதும் தெரிய வந்தது . போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த வந்ததேசத்தினர் 5 பேரை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர் .
இதையடுத்து , தமிழகத்தில் போலி ஆவணங்களுடன் தங்கியுள்ள வங்கதேசத்தினர் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது . வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதற்காக வட இந்தியர்கள் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இங்கு தங்கி சிகிச்சை பெறுகின்றனர். அதேபோல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் மேல்விஷாரம் போன்ற பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் வங்கதேசத்தினர் தொழிலாளர்களாக வேலை செய்யலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதையடுத்து, முறையான விசா இல்லாமல் போலி ஆவணங்களுடன் வங்கதேசத்தினர் யாராவது தங்கியுள்ளார்களா ? என மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் மத மோதல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் வேலூர் காந்திரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் தோல் தொழிற்சாலை தொழிலாளர்களின் விவரங்களையும் ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu