ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்
X
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 20 மற்றும் 21ஆம் தேதிகளில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை அளிக்கவிருந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வேலூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை திறப்பு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் 2 நாள் அரசு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

அந்நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு, இவற்றிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ராணிப்பேட்டை ,திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று இரவு சென்னையிலிருந்து செல்கிறார் . ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகள் திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் அவர் , புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு உள்ளார். அத்துடன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!