உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட பிரச்சாரம் மாலை 5 மணியுடன் நிறைவு

உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட  பிரச்சாரம் மாலை 5 மணியுடன் நிறைவு
X
வேலூர் மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டத்தில் வரும் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

5 மணிக்கு மேல் தேர்தலுக்கு தொடர்பு இல்லாத நபர்கள் ஊராட்சி பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் 6-ம் தேதி வரை முதற்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள், பார்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களிலும் 24,417 பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட 9 மாவட்டங்களில் ஏற்கனவே 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!